வறுமை
குறள் எண் 1041
இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னா தாது
குறள் எண் 1042
இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்
குறள் எண் 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை
குறள் எண் 1047
அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்
குறள் எண் 1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு
குறள் எண் 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்
குறள் எண் 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று
குறள் எண் 1069
இரவுஉள்ள உள்ளம் உருகும்; கரவுஉள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்