Kural

திருக்குறள் #1058
குறள்
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
குறள் விளக்கம்
இரந்து கேட்பவர் இல்லையென்றால் குளிர்ந்த இடத்தை உடைய இந்தப் பெரிய பூமியானது, (உயிரில்லாத) மரப்பாவையின் இயக்கத்தைப் போன்று (உயிரோட்டமில்லாமல் இருக்கும்).