Kural

திருக்குறள் #1048
குறள்
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
குறள் விளக்கம்
நேற்றும் கொலை செய்ததுபோல் (துன்புறுத்திய) வறுமையானது இன்றைக்கும் (என்னிடத்தில்) வருமோ? (என்று எண்ணி வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துகிறான்.