குறள்
இரவுஉள்ள உள்ளம் உருகும்; கரவுஉள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
குறள் விளக்கம்
பிறரிடம் சென்று இரத்தலாகிய கொடுமையை எண்ணினால் (எம்) உள்ளமானது உருகும். (ஆனால்) தம்மிடம் இரப்பவருக்கு இல்லை என்று கூறிப் பொருளை மறைத்து வைத்தலை எண்ணிலால் உருகும் அளவுக்குக்கூட இல்லாமல் அழிந்துபோகும்.