searchresults தெய்வம் குறள் எண் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு குறள் எண் 2 கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் குறள் எண் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் குறள் எண் 4 வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல குறள் எண் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு குறள் எண் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் குறள் எண் 7 தனக்குவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது குறள் எண் 8 அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது குறள் எண் 9 கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை குறள் எண் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் குறள் எண் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் குறள் எண் 610 மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு குறள் எண் 617 மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள் குறள் எண் 619 தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் குறள் எண் 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் அழுக்காறு குலம் மாண்பு நட்பு மனம் இம்மை போதை பகை மானம் தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய