Kural

திருக்குறள் #5
குறள்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
குறள் விளக்கம்
எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ள கடவுளை பொருள் நிறைந்த (அர்த்தமுள்ள) புகழ் மொழிகளால் (துதிப் பாடல்களால்) வாயாரப் பாடுகின்றவர்களுக்கு அறியாமையைச் சார்ந்துள்ள நல்வினைப் பயனாகிய இன்பமும், தீவினைப் பயனாகிய துன்பமும் உள்ளத்தின் சீரான அமைதியைக் குலைக்காது.
குறள் விளக்கம் - ஒலி