குறள்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
குறள் விளக்கம்
காலமனைத்திலும் நிறைந்திருக்கின்ற கடவுளுடைய திருவடிகளைச் சார்ந்திருப்பவர்கள் பிறப்பு இறப்புச் சுழல் நிறைந்த பெருங்கடலைக் கடப்பார்கள். இறைவனுடைய திருவடிகளைச் சார்ந்திராதவர்கள் பிறப்பு இறப்புச் சுழல் நிறைந்த பெருங்கடலைக் கடக்க மாட்டார்கள்.