குறள்
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது
குறள் விளக்கம்
புண்ணியக் கடலாகிய மறைகளின் மையக் கருத்தாகிய கடவுளின் திருவடிகளைச் சார்ந்திருப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) பொருள், இன்பமாகிய பிற கடல்களைக் கடப்பது மிகக் கடினமானது (இயலாது).