குறள்

கொடுங்கோண்மை
குறள் # 551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து
குறள் # 552
வேலோடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு
குறள் # 553
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்
குறள் # 554
கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு
குறள் # 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
குறள் # 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி
குறள் # 557
துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றுஅற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு
குறள் # 558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்
குறள் # 559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
குறள் # 560
ஆபயங்குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்