Kural

திருக்குறள் #558
குறள்
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்
குறள் விளக்கம்
முறையாக வழிநடக்காத அரசனுடைய கொடுமையான ஆட்சியின் கீழ் வாழும்நிலை ஏற்படுமானால் அது, பொருள் இல்லாத வறுமை நிலையைவிட, பொருள் உடைமையுடைய செல்வநிலை பெருந்துன்பத்தைக் கொடுக்கும்.