செங்கோண்மை
குறள் # 541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை
குறள் # 542
வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி
குறள் # 543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் என்றது மன்னவன் கோல்
குறள் # 544
குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு
குறள் # 545
இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு
குறள் # 546
வேல்அன்று வென்றி தருவது; மன்னவன் கோல்அதூஉம் கோடாது எனின்
குறள் # 547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்
குறள் # 548
எண்பதத்தான் ஓராமுறை செய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்
குறள் # 549
குடிபுறங் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று வேந்தன் தொழில்
குறள் # 550
கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல், பைங்கூழ் களைகட் டதனோடு நேர்

