Kural

திருக்குறள் #554
குறள்
கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு
குறள் விளக்கம்
பின்விளைவை ஆராயாமல் முறைதவறிச் செயல்படும் அரசன் முன் ஈட்டிய பொருளையும் அதற்குக் காரணமாகிய மக்களையும் ஒருசேர இழந்து விடுவான்.