Kural

திருக்குறள் #555
குறள்
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
குறள் விளக்கம்
அரசனது செல்வமாகிய மரத்தை அழிக்கும் வாள் படை, மக்கள் துன்பப்பட்டுப் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீரன்றோ!