Kural

திருக்குறள் #553
குறள்
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்
குறள் விளக்கம்
தினமும் நாட்டில் உருவாகும் தீமைகளை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தலைவன் தினமும் கெட்டுப்போய்க் கொண்டிருப்பான்.