Kural

திருக்குறள் #556
குறள்
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி
குறள் விளக்கம்
அரசருக்குப் புகழை நிலைபெறச் செய்வது அறவழியில் நடத்தப்படும் ஆட்சி முறையாகும். அவ்வாறு நிகழவில்லையானால் அரசருக்குப் புகழானது நிலைத்திராது.