வெகுவெந்த செய்யாமை
குறள் # 561
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
குறள் # 562
கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர்
குறள் # 563
வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
குறள் # 564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்
குறள் # 565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேய் கண்டன்ன துடைத்து
குறள் # 566
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடுஇன்றி ஆங்கே கெடும்
குறள் # 567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்
குறள் # 568
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு
குறள் # 569
செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்
குறள் # 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லது இல்லை நிலக்குப் பொறை

