கூடா ஒழுக்கம்
குறள் # 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்
குறள் # 272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின்
குறள் # 273
வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
குறள் # 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
குறள் # 275
பற்றுஅற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றுஎற்றுஎன்று ஏதம் பலவும் தரும்
குறள் # 276
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வண்கணா ரில்
குறள் # 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கில் கரியார் உடைத்து
குறள் # 278
மனத்தது மாசுஆக மாண்டார்நீ ராடி மறைந்துஒழுகு மாந்தர் பலர்
குறள் # 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்
குறள் # 280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்

