குறள்
பற்றுஅற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும்
குறள் விளக்கம்
(பிறர் தன்னை உயர்வாகக் கருத வேண்டும் என்பதற்காக) தமக்கு யாதொரு பற்றும் இல்லை என்று சொல்பவரது மறைவாகச் செய்யும் தவறான செயல்கள் (அந்நேரத்தில் இன்பமாக இருந்தாலும்) (பின்) எத்தகைய தவறைச் செய்துவிட்டோம் என்று (தம்மைத் தாமே நொந்துகொள்ளும்படி) துன்பங்கள் பலவற்றைக் கொடுக்கும்.