தவம்
குறள் # 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு
குறள் # 262
தவமும் தவமுறையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது
குறள் # 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்?
குறள் # 264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்
குறள் # 265
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்
குறள் # 266
தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார் அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு
குறள் # 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
குறள் # 268
தன்னுயிர் தான்அற பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்
குறள் # 269
கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
குறள் # 270
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்

