குறள்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
குறள் விளக்கம்
கள்ள மனம் உடையவனுடைய பிறர் அறியா வண்ணம் செய்யும் தவறான செயல்களை அவனது உடல்மயமாய் விளங்கும் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐந்து பெரும்பூதங்களும் கண்டு அவனறியா வண்ணம் தங்களுக்குள்ளே சிரித்துக் கொள்ளும்.