குறள்
மனத்தது மாசுஆக மாண்டார்நீ ராடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர்
குறள் விளக்கம்
(காமம் முதலிய) அழுக்குகளை மனத்தில் உடையவராக (புறத்தில்) பிறர் மதிக்கும் வண்ணம் (புற அழுக்குகளை நீக்கும்) நீராடலை (அடிக்கடி செய்து) பிறர் அறியாதபடி (தவத்திற்குப் பொருந்தாத செயல்களைச் செய்து) வாழும் மனிதர் (உலகத்தில்) பலர் இருக்கிறார்கள்.