குறள்
வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
குறள் விளக்கம்
மனதை ஆளும் வல்லமை இல்லாத தன்மையுடையவனின் மனதை ஆளும் வல்லமை உடையவன் போன்ற தவ வேடம், பசு (காவற்காரர் துரத்தாதிருக்கும்படி) புலியினுடைய தோலை போர்த்திக் கொண்டு (பயிரை) மேய்வதைப் போல (ஆகும்).