கொடுங்கோண்மை
குறள் # 551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து
குறள் # 552
வேலோடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலோடு நின்றான் இரவு
குறள் # 553
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்
குறள் # 554
கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு
குறள் # 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
குறள் # 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி
குறள் # 557
துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றுஅற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு
குறள் # 558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின்
குறள் # 559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்
குறள் # 560
ஆபயங்குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்

