அச்சம்
குறள் எண் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
குறள் எண் 366
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா
குறள் எண் 428
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
குறள் எண் 497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின்
குறள் எண் 500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு
குறள் எண் 585
கடாஅ உருவொடு கண்ணுஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று
குறள் எண் 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது
குறள் எண் 723
பகையகத்துச் சாவார் எளியர்; அரியர் அவையகத்து அஞ்சா தவர்
குறள் எண் 729
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவைஅஞ்சு வார்