குறள்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு
குறள் விளக்கம்
தீயசெயல் என்று சாஸ்த்ரங்களில் கூறப்படுகின்ற (நன்மை, தீமை இவற்றைப் பற்றிய) பகுத்தறிவு இன்றி நீண்டகாலம் தொடர்ந்து தீய செயல்களைச் செய்தவர்கள் (அ) தீயசெயல்களில் ஊறியவர்கள் பயப்படமாட்டார்கள். (அதற்கு மாறாக) நிலைத்த அமைதியை விரும்புகின்ற அறிவுடையோர் தீய செயல்களைச் செய்ய பயப்படுவர்.