குறள்
வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்அவை அஞ்சு பவர்க்கு
குறள் விளக்கம்
அச்சமற்ற வீரம் இல்லாதவர்க்கு கையில் வாள் இருந்தும் என்ன பயன்? அதுபோல அறிவு நுட்பமுடையவர்கள் கூடியுள்ள சபையைக் கண்டு பேசுவதற்கு, அச்சமுடையவர்கள் பலநூல்கள் கற்றிருந்தாலும் அதனால் அவர்களுக்கு என்ன பயன்?