குறள்
கடாஅ உருவொடு கண்ணுஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று
குறள் விளக்கம்
பிறரால் சந்தேகப்படாத தோற்றத்துடன் இருந்துகொண்டு (ஒருவேளை சந்தேகப்பட்டு ஆராய்ந்து அரிய முற்பட்டால்) மிரட்டுகின்றவர்களிடத்தில் பயப்படாமல் எந்த சூழ்நிலையிலும் தன் மனதில் உள்ளவற்றை உமிழாது (சொல்லாமல்) இருக்கும் பக்குவம் அல்லது திறமை உடையவனே உளவு பார்க்கத் தகுதி உடையவன்.