குறள்
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது
குறள் விளக்கம்
நீதி நூல்களைக் கற்று உணர்ந்து தான் சொல்ல வேண்டிய விஷயத்தை பகைவேந்தர் மனம் ஏற்றுக்கொள்ளுமாறு எடுத்துக்கூறி அவ்வாறு கூறும்போது அப்பகை வேந்தர் சினத்துடன் பார்த்தால் அப்பார்வைக்கு அஞ்சாமல் அவ்விஷயத்தை உரிய காலத்தில் முடிக்கக்கூடிய தக்க உபாயத்தை அறிபவனே தூதுவனாவான்.