குறள்

புல்லறிவாணமை
குறள் # 841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு
குறள் # 842
அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்
குறள் # 843
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
குறள் # 844
வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
குறள் # 845
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும்
குறள் # 846
அற்றம் மறித்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
குறள் # 847
அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
குறள் # 848
ஏவவும் செய்கலான் தாந்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்
குறள் # 849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டான்ஆம் தான்கண்ட வாறு
குறள் # 850
உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்