குறள்
ஏவவும் செய்கலான் தாந்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்
குறள் விளக்கம்
(தனக்கு நலம் பயக்கின்ற செயல்களைப்) பிறர் ஏவினாலும் செய்யாதவன், தானாகவும் அறிந்து அதனைச் செய்யாதவன் அவனது உடலில் வாழ்கின்ற உயிர் உடலை விட்டும் நீங்கும் வரையிலும் (இவ்வுலகிற்கு) ஒரு பெரிய நோயைப் போன்றவன்.