குறள்

பேதமை
குறள் # 831
பேதமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்
குறள் # 832
பேதமையுள் எல்லாம் பேதமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்
குறள் # 833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
குறள் # 834
ஓதிஉணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்
பேதையில் பேதையார் இல்
குறள் # 835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு
குறள் # 836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேல் கொளின்
குறள் # 837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
குறள் # 838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்
குறள் # 839
பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதுஒன்று இல்
குறள் # 840
கழாஅக்கால் பள்ளியுள்ள வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்