குறள்
வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
குறள் விளக்கம்
வெளிற்றுத்தன்மை (அறிவின்மை) என்று சொல்லப்படுவது யாது என்று கேட்டால், அது, தாம் ஒளி, புகழ், அழகு போன்றவற்றுக்கு முதன்மையான அறிவினை உடையவர் என்று கருதிக்கொள்ளும் மயக்கமாகும்.