Kural

திருக்குறள் #846
குறள்
அற்றம் மறித்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
குறள் விளக்கம்
தம்மிடத்து (உண்டாகும்) அவமதிப்பிற்குக் காரணமான குற்றங்களை (அறிந்து) அவற்றை நீக்காமல், (உடலளவில் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள) மறைப்பதற்குரிய உறுப்புகளை மட்டும் (ஆடையால்) மறைத்து (தன்னை மானம் மிகுந்தவராக எண்ணிக்கொள்ளுதல்) புல்லறிவாகும்.
குறள் விளக்கம் - ஒலி