பழமை
குறள் # 801
பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
குறள் # 802
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு உப்புஆதல் சான்றோர் கடன்
குறள் # 803
பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை?
குறள் # 804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால் கேளாது நட்டார் செயின்
குறள் # 805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க நோதக்க நட்டார் செயின்
குறள் # 806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
குறள் # 807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர்
குறள் # 808
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின்
குறள் # 809
கெடாஅ அழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையு முலகு
குறள் # 810
விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்

