Kural

திருக்குறள் #806
குறள்
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
குறள் விளக்கம்
நீதி ஒழுக்கங்கலின் வரம்பில் நிலைத்து நின்றவர், தம்முடன் நீண்ட நட்புரிமை உடையாரது நட்பினை, அவரால் பொருட்கேடு, போர்க்கேடு முதலான தொல்லைகள் பல தொடர்ந்து வந்தபோதும், அவரை விட்டுப் பிரியமாட்டார்.