Kural

திருக்குறள் #803
குறள்
பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை?
குறள் விளக்கம்
தமக்கு உடன்பாடு இல்லாதபோதும் நட்பு பூண்டோர் உரிமையோடு செய்யும் செயல்களை தாம் செய்தாற்போல் எண்ணி அவற்றைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளவில்லையெனின், நீண்டகால பழக்கத்தால் ஏற்பட்ட நட்பானது, என்ன பயனைச் செய்யும்?