Kural

திருக்குறள் #805
குறள்
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்
குறள் விளக்கம்
துன்பம் தருகின்ற, வெறுக்கத்தக்க செயல்களை, நண்பர், செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றோ அதிக உரிமை என்றோ என்று எண்ணி, அவற்றைப் பொறுத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.