குறள்
கெடாஅ அழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையு முலகு
குறள் விளக்கம்
உரிமை கெடாமல், நீண்ட காலம் தொடர்ந்து வருகின்ற நட்புரிமை உடையவர்களின் நட்பினை, (பிழையைக் கருத்தில்கொண்டு) விட்டுப் பிரியாதவரை, மேலோர் பாராட்டிப் பேசுவர். (அவரது நட்பை எல்லோரும் விரும்புவர் என்பது கருத்து).