தீ நட்பு
குறள் # 811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது
குறள் # 812
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?
குறள் # 813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்
குறள் # 814
அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை
குறள் # 815
செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று
குறள் # 816
பேதை பெருங்கழீய் நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி பெறும்
குறள் # 817
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்
குறள் # 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்
குறள் # 819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு
குறள் # 820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு

