குறள்
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்
குறள் விளக்கம்
நண்பர் ஒருவர் நீண்ட காலம் பழகிய உரிமையால் கருத்துக்களைக் கேளாமல், தெரிவிக்காமலேயே தமது செயல்களைச் செய்துமுடித்தால், அச்செயலில் விருப்பமுடையவராய், அறிவுடையோர் அதனை விரும்பி ஏற்றுக்கொள்வர்.