நட்பாராய்தல்
குறள் # 791
நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின் வீடுஇல்லை நட்பாள் பவர்க்கு
குறள் # 792
ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்
குறள் # 793
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இன்னும் அறிந்துயாக்க நட்பு
குறள் # 794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
குறள் # 795
அழக்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்
குறள் # 796
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்
குறள் # 797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்
குறள் # 798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு
குறள் # 799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை உள்ளினும் உள்ளம் சுடும்
குறள் # 800
மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று ஈத்து ஒருவுக ஒப்பிலார் நட்பு

