குறள்
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு
உப்புஆதல் சான்றோர் கடன்
குறள் விளக்கம்
நட்பிற்கு அவயவமான, நட்பு பூண்டவர்கள் உரிமையோடு செய்யும் செயல்கள். அவ்வாறு உரிமையோடு செய்யப்படும் செயல்களுக்கு அவற்றைத் தவறாக எண்ணாமல் அவற்றைப் பொறுத்து ஏற்றுக்கொண்டு, இனிமைக்கு இனிமை சேர்க்கும் உப்பைப் போன்று இனியராதல் அருங்குணங்கள் நிரம்பப் பெற்ற சான்றோர்களுக்கு, முறைமையாகும்.