Kural

திருக்குறள் #541
குறள்
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
குறள் விளக்கம்
மக்களின் குற்றங்களை ஆராய்ந்து, உணர்ந்து யாராக இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் நடுவுநிலைமையுடன் குற்றத்திற்குத் தகுந்த தண்டனையைத் தேர்ந்தெடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதே நேர்மையான ஆட்சியாகும்.