Kural

திருக்குறள் #542
குறள்
வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி
குறள் விளக்கம்
அனைத்து உடல்களிலும் வாழும் உயிர்களெல்லாம் மழையைச் சார்ந்து, மழையினால் தோன்றும் உணவைச் சார்ந்து வாழ்கின்றன. அதுபோல் மக்களும் அரசனுடைய செங்கோண்மையாகிய பாதுகாப்பைச் சார்ந்து வாழ்கின்றனர்.(நோக்கி வாழ்தல்=இன்றியமையாமை).