சுற்றந் தழால்
குறள் # 521
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள
குறள் # 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும்
குறள் # 523
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று
குறள் # 524
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்
குறள் # 525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்
குறள் # 526
பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குஉடையார் மாநிலத்து இல்
குறள் # 527
காக்கை கரவா கரைந்துஉண்ணும்; ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள
குறள் # 528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்
குறள் # 529
தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்
குறள் # 530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்

