தெரிந்து வினையாடல்
குறள் # 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்
குறள் # 512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை
குறள் # 513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு
குறள் # 514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்
குறள் # 515
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
குறள் # 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்
குறள் # 517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவங்கண் விடல்
குறள் # 518
வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை அதற்குஉரிய னாகச் செயல்
குறள் # 519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு
குறள் # 520
நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு

