Kural

திருக்குறள் #528
குறள்
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
குறள் விளக்கம்
அரசன் அனைவரையும் ஒரே விதமாகக் கருதாமல் அவரவர் தகுதிக்கேற்பப் புரிந்துகொள்வானேயானால் அத்தகைய பண்பை உணர்ந்து அவனைவிட்டு விலகாமல் உடனிருப்பவர் பலராவர்.