Kural

திருக்குறள் #522
குறள்
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
குறள் விளக்கம்
அன்பு குறையாத சுற்றத்தார் அமைவாராயின் (அது) வளர்ச்சி குறையாத எல்லாச் செல்வங்களையும் கொடுக்கும் தன்மையுடையதாகும்.