Kural

திருக்குறள் #525
குறள்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்
குறள் விளக்கம்
சுற்றத்தார்க்கு ஒருவன் தேவையானவற்றை வழங்குதலையும் இனிய சொற்களைச் சொல்லுதலையும் செய்வானேயானால் வளர்ச்சியுடைய சுற்றத்தினரால் சூழ்ந்திருப்பான்.