Kural

திருக்குறள் #529
குறள்
தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்
குறள் விளக்கம்
தன்னைச் சேர்ந்தவராக இருந்து, ஏதேனும் ஒரு காரணத்தால் தன்னை விட்டுப் பிரிந்து போனவர் மீண்டும் வந்து சேர்ந்து சுற்றமானால் பிரிந்து போனதற்கான காரணம் நீங்கியதால் உண்டானதாகும்.